இலங்கையில் குளிரூட்டப்பட்ட அறைகளில் பணி புரிவோருக்கு முக்கிய எச்சரிக்கை!

You are currently viewing இலங்கையில் குளிரூட்டப்பட்ட அறைகளில் பணி புரிவோருக்கு முக்கிய எச்சரிக்கை!

இலங்கையில் குளிரூட்டப்பட்ட அறைகளில் பணியாற்றுவோர் முடிந்தவரை இரண்டு முகக் கவசங்களை அணியவும் என்றும்  இரண்டு மீற்றர் சமூக இடைவெளியைப் பின்பற்றுமாறும் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. முகக்கவசம் அணியும் போது சரியான முறையில் தரமான முகக்கவசத்தை அணிய வேண்டும் என்றும் கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் வைரஸ் நோய்களுக்கான நிபுணர் வைத்தியர் நதீகா ஜானகே தெரிவித்துள்ளார். அடியிலுள்ள முகக்கவசம் இறுக்கமாக இருப் பதற்காக  முகக் கவசத்துக்கு  மேலாக மற்றொரு முகக் கவசத்தை அணிய வேண்டும் என்றும்  பொதுச் சுகாதார அதிகாரிகள் ஒரு மீற்றர் இடை வெளியைப் பின்பற்றுமாறும் அறி வித்துள்ளனர் என்றும் முடிந்தவரை இரண்டு மீற்றர் சமூக இடைவெளியைப் பேணுவது மிகவும் சிறந்ததாகும்  எனவும் அவர் தெரிவித்துள்ளார். டெல்டா கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் சுகாதார வழிகாட்டிகளைப் பின்பற்ற வேண்டும் என சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments