இலங்கையில் மனித உரிமைகள் மீளவும் மீறப்பட இடமுள்ளது – ஐ.நா

You are currently viewing இலங்கையில் மனித உரிமைகள் மீளவும் மீறப்பட இடமுள்ளது – ஐ.நா

மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 பிரேரணையிலுள்ள விடயங்களை இலங்கை பாதுகாத்து நிறைவேற்றும் என எதிர்பார்ப்பதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்டத்தொடர் இம்மாத இறுதியில் நடைபெறவுள்ளது.

அதற்காக மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் மிச்செல் பெச்சலட் அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளார்.

நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளைப் பேணலில் இலங்கை முன்னேற்றமடைந்துள்ளதாகத் தெரிகின்ற போதிலும், நிறுவன மறுசீரமைப்பு மற்றும் தண்டனை வழங்கல் செயற்பாட்டில் நிலவும் குறைபாட்டினால் மனித உரிமைகள் மீளவும் மீறப்படுவதற்கு இடமுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், மனித உரிமைகள் பேரவையின் 30/1 மற்றும் 40/1 தீர்மானங்களிலிருந்து வௌியேறுவதாக அரசாங்கம் பகிரங்கமாக அறிவித்துள்ளது.

பகிர்ந்துகொள்ள