அண்மையில் கனேடிய வர்த்தக சமுகத்துடன் இலங்கை வந்த கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹான் டொங் மற்றும் திருமதி ரேச்சல் தோமஸ் ஆகியோர் கனேடிய அரசாங்கம் சார்பில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி வரவில்லை என கனேடிய ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.
கனேடிய வர்த்தக சமூகத்தை இலங்கையில் முதலீடு செய்ய ஊக்குவிப்பதற்காக கனேடிய அரசாங்கத்தின் சார்பில் இலங்கைக்கு விஜயம் செய்ய கனேடிய அரசாங்கம் அவர்களுக்கு அனுமதி வழங்கவில்லை.
ஹான் டோங் மற்றும் திருமதி ரேச்சல் தோமஸ் ஆகியோர் கனேடியர்களை மோசடி மற்றும் ஊழல் நிறைந்த ஒரு தோல்வியுற்ற நாட்டில் முதலீடு செய்ய ஊக்குவிப்பதில் தனது வருத்தத்தை தெரிவிப்பதாக ஹரி ஆனந்த சங்கரி,குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இலங்கை வந்த மேற்படி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிபர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரை சந்தித்து கலந்துரையாடி இருந்தமை குறிப்பிடத்தக்கது.