இலங்கையில் கடந்த 13 ஆம் திகதி காலை 6 மணி முதல் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி வரையான 7 நாட்களில் 16,384 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செயயப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
7 நாட்களில் கொழும்பில் அதிகளவாக 3,153 பேருக்கு தொற்று உறுதியானது. கம்பஹாவில் 2,835, கருத்துறையில் 1,634, குருநாகலையில் 900, மட்டக்களப்பில் 724, கண்டியில் 675, காலியில், 633, நுலரெயியாவில் 625, யாழ்ப்பாணத்தில் 489 பேருக்கும் தொற்று உறுதியானது.
அத்துடன் புத்தளத்தில் 417, கேகாலையில் 413, மாத்தறையில் 335, அம்பாறையில் 291, மாத்தளையில் 290, பதுளையில் 285, ஹம்பாந்தோட்டையில் 265, அனுராதபுரத்தில் 210, திருகோணமலையில் 197, பொலநறுவையில் 135, கிளிநொச்சியில் 107, மொனராகலையில் 104, வவுனியாவில் 97, மன்னாரில் 61, முல்லைத்தீவில் 35 பேருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டது எனவும் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.