சர்வதேச கால்பந்தாட்டப் பேரவை, இலங்கை கால்பந்தாட்ட அணிகள் மீது தடைகளை அறிவித்துள்ளது.
சர்வதேச கால்பந்தாட்டப் பேரவையினால் நடாத்தப்படும் இரண்டு போட்டித் தொடர்களில் பங்கேற்கும் வாய்ப்பினை இலங்கை இழந்துள்ளது.
இது தொடர்பிலான அதிகாரபூர்வ கடிதம் இலங்கை கால்பந்தாட்டப் பேரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் ஆண்டு பாரிஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டித் தொடரின் ஆண்களுக்கான கால்பந்தாட்டப் போட்டி மற்றும் கட்டாரில் நடைபெறவுள்ள 23 வயதுக்கும் கீழ்ப்பட்ட ஆகிய கால்பந்தாட்டப் போட்டி ஆகியனவற்றில் இலங்கை பங்குபற்ற முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கால்பந்தாட்டப் பேரவை இலங்கைக்கு கடந்த ஜனவரி மாதம் தடை விதித்திருந்தது.
விளளயாட்டுத்துறை அமைச்சினால் நடத்தப்பட்ட கால்பந்தாட்டப் பேரவைக்கான தேர்தலில் முறைகேடுகள் இடம்பெற்றதாகவும் மூன்றாம் தரப்பின் தலையீடு காணப்பட்டதாகவும் தெரிவித்து இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.