ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை குறித்த தீர்மானம் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டால் போதிய ஆதரவு கிடைக்காது என இலங்கை கருதுகின்றது. ஆறு நாடுகள் மாத்திரமே தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்கும் என அச்சம் கொண்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்கா கனடா ஜேர்மனி பிரித்தானியா மலாவி மொன்டிநீக்ரோ வடமசடோனியா ஆகிய நாடுகள் இலங்கை குறித்த தீhமானத்திற்கு இணை அனுசரணை வழங்கியுள்ளன. புதிய தீர்மானம் நிறைவேற்றப்படுவதை தடுக்க முடியும் என தேவையற்ற நம்பிக்கையை கொண்டிருக்கவில்லை என வெளிவிவகார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன என டெய்லி மிரர் தெரிவித்துள்ளது.
இலங்கை குறித்த இந்த தீர்மானம் இலங்கையின் பொறுப்புக்கூறல் மனித உரிமை மீறல் தொடர்பில் ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறையை வலுப்படுத்துமாறு வேண்டுகோள் விடுக்கின்றது.
கடந்த வருட தீர்மானத்தின் அடிப்படையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் இந்த பொறிமுறையை உருவாக்கியுள்ளது.
இந்த பொறிமுறை இயங்குவதற்கு மேலும் வளங்களை வழங்குமாறு புதிய தீர்மானம் வேண்டுகோள் விடுக்கின்றது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானம் நிறைவேற்றப்படுவதை தடுப்பதற்கான ஆதரவை 47 நாடுகளிடமிருந்து பெற முடியாது என இலங்கை கருதுவதாக வெளிவிவகார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இலங்கைக்கு ஆதரவாக கடந்த காலங்களில் வாக்களித்துவந்துள்ள பங்களாதேஸ் ரஸ்யா போன்ற நாடுகள் இம்முறை மனித உரிமை பேரவையில் உறுப்புரிமை பெறவில்லை .
இந்தியா இம்முறையும் வாக்கெடுப்பை தவிர்க்கலாம் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகின்றது,பிராந்திய வல்லரசின் அழுத்தங்கள் காரணமாக நேபாளமும் வாக்கெடுப்பை தவிர்க்கும்.
வழமையாக இலங்கைக்கு ஆதரவளிக்கும் மத்திய கிழக்கு நாடுகளும் இம்முறை வாக்களிப்பை தவிர்க்கலாம் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகின்றது.
தீர்மானத்தை கொண்டுவருபவர்களிற்கு ஆதரவு கிடைக்கும் இந்த யதார்தத்தை நாங்கள் உணர்ந்துள்ளோம் என வெளிவிவகார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.