இலங்கை சிறையில் உள்ள கடற்றொழிலாளர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி உண்ணாவிரதம்

You are currently viewing இலங்கை சிறையில் உள்ள கடற்றொழிலாளர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி உண்ணாவிரதம்

எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுப்பட்ட இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள கடற்றொழிலாளர்களை உடனடியாக படகுடன் விடுதலை செய்ய வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டமொன்று இடம்பெற்று வருகின்றது.

இந்தியா (India) – தங்கச்சிமடத்தில் கடற்றொழிலாளர்கள் மற்றும் சிறையில் உள்ள கடற்றொழிலாளர்களின் குடும்பத்தினர்   வியாழக்கிழமை(3) உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இலங்கை சிறையில் உள்ள கடற்றொழிலாளர்களை உடனடியாக மீட்டு தர கோரி கடற்றொழிலாளர்களின் குடும்பத்தினர் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து சனிக்கிழமை கடற்றொழிலுக்கு சென்று எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுப்பட்டதாக கைது செய்யப்பட்ட 17 கடற்றொழிலாளர்கள் உட்பட முன்னதாக சிறைபிடிக்கப்பட்டு இலங்கை சிறையில் உள்ள சுமார் 150-க்கும் மேற்பட்ட கடற்றொழிலாளர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

இலங்கை கடற்படை வசமுள்ள நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 175 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் நாட்டு படகுகள் உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி இன்று காலை முதல் தங்கச்சிமடம் வலசை பேருந்து நிலையத்தில் விசைப்படகு கடற்றொழிலாளர்கள் மற்றும் சிறையில் உள்ள கடற்றொழிலாளர்கள் உறவினர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வயிற்று பிழைப்புக்காக கடற்றொழிலில் ஈடுப்பட சென்ற கடற்றொழிலாளர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது மிகுந்த வேதனை அளிக்கிறது.

எனவே, இலங்கை சிறையில் உள்ள தங்கள் உறவினர்களை விரைந்து மீட்டு தாயகம் அழைத்து வருவதற்கு மத்திய, மாநில அரசுகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர்.

இதனிடையே கடற்றொழிலாளர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் விசைப்படகு கடற்றொழிலாளர்கள் இன்று மூன்றாவது நாளாக தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments