இலங்கை செல்வதில் பெரும் அச்சத்தில் புலம்பெயர் தமிழர்கள்!

You are currently viewing இலங்கை செல்வதில் பெரும் அச்சத்தில் புலம்பெயர் தமிழர்கள்!

அண்மையில் ஈழத்தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டமையானது அனைத்து புலம்பெயர் ஈழத்தமிழர்களையும் பாதித்துள்ளதென ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி தவராசா (KV Thavarasa) தெரிவித்துள்ளார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானியாவிலிருந்து, தீவிரவாத அமைப்புக்கு பணம் வசூலித்ததாக குற்றம் சுமத்தப்பட்டு ஈழத்தமிழர் ஒருவர் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார்.

பயங்கரவாத தடைசட்டத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்களித்திருந்த தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் இவ்வாறான ஒரு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தமையானது பல்வேறு தரப்புகளில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

குறித்த பிரித்தானிய பிரஜை தொடர்பான வழக்கு, அனைத்து புலம்பெயர் தமிழர்கள் மத்தியிலும் இலங்கைக்கு பயணம் செய்யும் விடயத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply