இலங்கை பிரதமர் மஹிந்த பதவி விலகுகிறார்!

You are currently viewing இலங்கை பிரதமர் மஹிந்த பதவி விலகுகிறார்!

இலங்கையின் பிரதமரான மஹிந்த ராஜபக்க்ஷ, பதவி விலகுவதற்கான கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார சீர்கேடுகளுக்கு பொறுப்பேற்று, ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முழு அரசும் பதவி விலக வேண்டுமெனக்கோரி, சுமார் ஒரு மாதகாலமாக காலிமுகத்திடல் மற்றும் அலரி மாளிகை / ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட பகுதிகளிலும், தென்னிலங்கையில் வேறும் பல இடங்களிலும் மக்கள் போராட்டங்கள் தொடர்ந்து வரும் நிலையில், பிரதமர் மஹிந்த பதவிவிலகல் கடிதத்தை அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரதமரின் பதவி விலகலுக்கான செய்திகள் கசிந்திருந்த நிலையில், பிரதமரின் கட்சி ஆதரவாளார்கள் என அடையாளப்படுத்தப்படும் கும்பல்களால், காலிமுகத்திடல் உள்ளிட்ட பகுதிகளில் போராட்டங்களில் ஈடுபட்டிருந்த மக்கள்மீது வன்முறைகள் ஏவி விடப்பட்ட நிலையில், கலவரங்களின் காரணமாக சுமார் 78 மக்கள் காயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply