நாடளாவிய ரீதியில் 10 குடும்பங்களில் 4 குடும்பங்கள் தமது அன்றாட வாழ்வாதார – உணவுத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு சிரமப்படும் நிலை தொடர்வதாக ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத்திட்ட பிரிவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் உலக உணவுத்திட்ட பிரிவு கடந்த 11 – 14ஆம் திகதி வரையான காலப்பகுதியில் முன்னெடுத்திருந்த மதிப்பாய்வு ஒன்றிற்கமையவே மேற்கண்டவாறு கூறியுள்ளது. மேலும் விளக்குகையில், “பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை படிப்படியாக மீண்டு வருகின்றது.