சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் நாளையொட்டி திருகோணமலையில் நேற்று காணாமல் ஆக்கப்பட்டோரின் அமைப்பு போராட்டத்தை முன்னெடுத்தது.
திருகோணமலை கடற்கரையில் இடம்பெற்ற இந்தப் போராட்டத்தில் கிழக்கின் மூன்று மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி போராட்டத்தை நடத்தினர்.
அதனைத் தடுக்க காவல்துறையினர் பலத்த முயற்சி எடுத்த போது அங்கே மக்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது. இதில் ஒருவர் கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் போராட்டத்தில் கலந்துகொண்ட சமூகச் செயற்பாட்டாளர்கள் நேரடியாக திருகோணமலையிலுள்ள இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் தமக்கு காவல்துறையினர் அச்சுறுத்தல் விடுத்தனர் என்று முறைப்பாடு செய்துள்ளார்கள்.
இறுதியாக அவர்கள் திருகோணமலை குரு முதல்வர் அருட்பணி றொபின்சனிடம் மகஜரைச் சமர்ப்பித்தனர்.