இலாபச்செழிப்பின் விளைவு : வரலாற்று விலைக்குறைப்புடன் KIWI!

  • Post author:
You are currently viewing இலாபச்செழிப்பின் விளைவு : வரலாற்று விலைக்குறைப்புடன்   KIWI!

விற்பனை இலாபச் செழிப்பிற்குப் பின்னர், இப்போது விலைகளைக் குறைக்க இடமுண்டு என நம்புவதாக Kiwi கூறியுள்ளது.

வெள்ளி முதல் , KIWI அதிகம் விற்பனையாகும் 200 பொருட்களின் விலையை 20 விழுக்காடு குறைக்கவுள்ளது. இது இதுவரை செய்யப்பட்ட மிகப்பெரிய விலைக் குறைப்பு ஆகும்.

“நாங்கள் ஒரு அசாதாரண சூழ்நிலையில் இருக்கின்றோம். பலர் பொருளாதார ரீதியாக மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள் என்பதை நாங்கள் அறிவோம்” என்று KIWI தகவல் தொடர்பு மேலாளர் “Kristine Aakvaag Arvin” கூறியுள்ளார்.

அதேபோல் Rema 1000, அவர்களின் வழக்கமாக விலைக் குறைப்புகளுடன் தொடர்கின்றார்கள்.

இலாபச்செழிப்பின் விளைவு : வரலாற்று விலைக்குறைப்புடன் KIWI! 1

“நாங்கள் ஒவ்வொரு நாளும் விலைகளைக் குறைக்கின்றோம், இது << வழக்கம் போல் வணிகமாகும் – business as usual >>. இன்று எங்கள் கடைகளில், போட்டியாளரால் விளம்பரப்படுத்தப்பட்ட அதே குறைந்த விலையையே நீங்கள் காண்பீர்கள்” என்று Rema 1000 தலைமை நிர்வாக அதிகாரி “Trond Bentestuen” கூறியுள்ளார்.

மேலதிக தகவல்: Dagbladet

பகிர்ந்துகொள்ள