இளம்பெண்ணை கடத்திச் சென்ற டிப்பர் விபத்து! – இளைஞன் பலி

You are currently viewing இளம்பெண்ணை கடத்திச் சென்ற டிப்பர் விபத்து! – இளைஞன் பலி

கிளிநொச்சியில் இளம்பெண் ஒருவரை கடத்திச் சென்றதாகத் தெரிவிக்கப்படும் டிப்பர் வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.

வட்டக்கச்சி – புதுப்பாலம் பகுதியில் அதி வேகமாக வந்த டிப்பர் வாகனம் வாய்க்கால் ஒன்றுக்குள் தடம் புரண்டதில் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துடன் இளம்பெண் ஒருவர் உட்பட்ட இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இதேவேளை குறித்த டிப்பர் வாகனத்தினை சிலர் மோட்டார் சைக்கிள்களில் துரத்திச் சென்றதாகவும் அதன்போதே டிப்பர் வாகனச் சாரதி அதி வேகமாக வாகனத்தைச் செலுத்தியதால் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் விபத்துக்குள்ளதாகியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் டிலக்சன் என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

வாகனத்தில் கடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் 23 வயதுடைய இளம் பெண் படுகாயம் அடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply