இளம் பில்லியனரை கெளரவித்த இளவரசர் வில்லியம்!

You are currently viewing இளம் பில்லியனரை கெளரவித்த இளவரசர் வில்லியம்!

பிரித்தானியாவில் இளம் சாதனையாளராக கருதப்படும் ஜிம்ஷார்க் நிறுவனர் பென் பிரான்சிஸ், இளவரசர் வில்லியமிடம் இருந்து உயரிய விருதான MBEயை பெற்றார். 2012ஆம் ஆண்டில் ஆஸ்டன் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறிய பென் பிரான்சிஸ் என்ற இளைஞர் (30), Pizza Hut டெலிவரி பாயாக வேலை பார்த்தார்.

எனினும் முழுநேரமும் தனது தொழிலில் கவனம் செலுத்திய பென், ஜிம்ஷார்க் என்ற நிறுவனத்தை தொடங்கி பிரித்தானியாவின் இளம் தொழிலதிபராக உருவெடுத்தார்.

கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட ஃபோர்ப்ஸ் பில்லியனர்கள் பட்டியலில், பென் பிரான்சிஸின் நிகர மதிப்பு 1.2 பில்லியன் டொலர்கள் என மதிப்பிடப்பட்டது. இதன்மூலம் அவர் பிரித்தானியாவின் இளம் பில்லியனர் ஆனார்.

இந்த நிலையில் வணிகத் துறையில் ஆற்றிய சேவைகளுக்காக, விண்ட்ஸர் கோட்டையில் உள்ள Member of the Order of the British Empire உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், விண்ட்ஸர் கோட்டையில் இளவரசர் வில்லியம் அவருக்கு இந்த கௌரவத்தை அளித்தார். இதுகுறித்து பென் பிரான்சிஸ் கூறுகையில்,

‘என்னால் நம்ப முடியவில்லை, ஆனால் எனக்கு MBE கௌரவம் கிடைத்துள்ளது. ஒரு விருது வழங்கப்படும் போது எனக்கு ஏற்பட்ட மிக உண்மையான உணர்வு இதுவாக இருக்கலாம். ஜிம்ஷார்க்கில் நான் செய்யும் எல்லாவற்றிலும் என்னைச் சுற்றி இருக்கும் அனைவருக்கும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply