இளம் பெண் பட்டதாரி உயிரிழப்பு : விசாரணை நிறைவு : தவறிழைத்தவர்கள் அடையாளம்

You are currently viewing இளம் பெண் பட்டதாரி உயிரிழப்பு : விசாரணை நிறைவு : தவறிழைத்தவர்கள் அடையாளம்

இளம் பெண் பட்டதாரி உயிரிழப்பு : விசாரணை நிறைவு : தவறிழைத்தவர்கள் அடையாளம் 1

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில்  பட்டதாரியான இளம் தாயொருவர்  சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பில் வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளரினால் அமைக்கப்பட்ட சுயாதீன விசாரணை குழுவின் விசாரணைகள் நிறைவடைந்துள்ள நிலையில், சம்பவ தினத்தின்போது சிலர் தவறிழைத்துள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அஸாத் எம். ஹனீபா தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

மன்னார்  – தம்பனைக்குளம் பகுதியைச் சேர்ந்த பட்டதாரியான இளம் தாயொருவர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவமானது கடந்த 28ஆம் திகதி    ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.

அந்த இளம் தாயின் மரணத்துக்கு சம்பவ தினத்தன்று விடுதியில் இருந்தவர்களின் அசமந்தப்போக்கே காரணம் என குற்றம் சுமத்தப்பட்டது.

இந்த மரணம் தொடர்பாக வட மாகாண சுகாதார அமைச்சினால் சுயாதீன விசாரணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டு மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வருகை தந்து துரித விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

விசாரணைகள் தற்போது நிறைவடைந்த நிலையில், விசாரணைகளின் அடிப்படையில் சிலர் தவறிழைத்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக விசேட அறிக்கை வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளருக்கு மேலதிக நடவடிக்கைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், மத்திய சுகாதார அமைச்சின் விசாரணைக் குழுவொன்று மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வருகை தந்து விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளனர்.

இந்த பெண் மரணமடைந்ததை தொடர்ந்து உடனடியாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மத்திய சுகாதார அமைச்சின் விசாரணைகள் முடிவடைந்தவுடன்  தவறிழைத்தவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

அப்பெண்ணின் மரணம் தொடர்பாக உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து எனது தொலைபேசிக்கு பல்வேறு அழைப்புகளினூடாக  கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருகிறது.

இந்த அச்சுறுத்தல் குறித்து மன்னார் சிறீலங்கா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments