இஸ்ரேலிய பணயக்கைதிகள் அனைவரையும் விடுவிப்பதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ள சூழலில் கடந்த 24 மணிநேரத்தில் காஸா மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தியுள்ளது.
காஸாவின் தெற்கு நகரமான கான் யூனுஸ் பகுதியில் மக்கள் தங்கியிருந்த கூடாரங்கள் மீது இஸ்ரேலிய ஏவுகணைத் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் உட்பட 23 பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
உயிரிழந்தவர்கள் கூடாரத்துக்குள் உயிருடன் எரிந்து பலியானதாக உடல்களைப் பெற்ற வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.