இஸ்ரேலின் விமானப்படை தாக்குதலில் ஹிஸ்புல்லா ஆயுதக்குழு தளபதி பலி!

You are currently viewing இஸ்ரேலின் விமானப்படை தாக்குதலில் ஹிஸ்புல்லா ஆயுதக்குழு தளபதி பலி!

லெபனான் மீது இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில், ஹிஸ்புல்லா அமைப்பின் ஆயுதக்குழு தளபதி கொல்லப்பட்டார். பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஹிஸ்புல்லா ஆயுதக்குழு ஹமாஸுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது. ஈரானின் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா, அவ்வப்போது இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது.

இந்த நிலையில், லெபனானின் ஜொலியா என்ற கிராமத்தில் உள்ள ஒரு வீட்டினை குறிவைத்து விமானப்படை தாக்குதல் நடத்தியது.

இதில் ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினர் 4 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களில் தளபதி தாலிப் அப்துல்லாவும் ஒருவர்.

இதனைத் தொடர்ந்து ஹிஸ்புல்லா நடத்திய பதிலடி ராக்கெட் தாக்குதலில், இஸ்ரேலின் சில பகுதிகளில் தீ விபத்து ஏற்பட்டது.

அத்துடன் இஸ்ரேல் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துவோம் என ஹிஸ்புல்லா எச்சரிக்கை விடுத்துள்ளதால், இருதரப்புகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply