இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள் மனித புதைகுழிகள்!

You are currently viewing இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள் மனித புதைகுழிகள்!

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த காசாவின் அல்ஸிபா மருத்துவமனையில் பாரிய மனித புதைகுழியொன்றை மருத்துவ பணியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர் எனஅல்ஜசீரா தெரிவித்துள்ளது.

காணாமல்போன தங்களின் குடும்பத்தவர்களின் உடல்கள் அங்கு காணப்படுகின்றனவா என்பதை பார்ப்பதாக பொதுமக்கள் அங்கு திரண்டனர் என அல்ஜசீரா தெரிவித்துள்ளது.

 

முஸ்லீம்களின் புனித பண்டிகை காலம் முதல் நான் இந்த மனித புதைகுழியிலிருந்து உடல்கள் தோண்டப்படுவதை பார்வையிட்டு வந்துள்ளேன் அவ்;வேளை எனது தாயாரின் உடலை அடையாளம் கண்டேன் என  ஒருவர் தெரிவித்துள்ளார்.

காலில் காணப்பட்ட வித்தியாசமான அடையாளத்தை வைத்தே அது எனது தாய் என்பதை உறுதி செய்தேன் என அவர்தெரிவித்துள்ளார்.

அல்ஸிபா மருத்துவமனையில் அடையாளம் காணப்பட்டுள்ள பல மனித புதைகுழிகளில் இதுவும் ஒன்று என தெரிவித்துள்ள அல்ஜசீரா  இரண்டு வாரங்கள் மருத்துவமனையை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்த பின்னர் ஏப்பிரல் முதலாம் திகதி இஸ்ரேலிய படையினர் இந்த மனித புதைகுழிகள் மீட்கப்பட்டுள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளது.

முற்றாக சேதமடைந்துள்ள காசாவின் மருத்துவமனை செயற்பட முடியாத நிலையில் காணப்படுகின்றது.

இஸ்ரேலிய படையினர் தாங்கள் பலரை கொலைசெய்து கைதுசெய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

எனினும் மனிதபுதைகுழியில் மீட்கப்பட்ட சில உடல்கள்மருத்துமவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளின் உடல்கள் என நேரில் பார்த்த சிலர் தெரிவித்துள்ளனர்.

ஒரு உடல்  நோயாளியின் காயங்களை சுற்றி கட்டப்படும் துணியுடன் காணப்பட்டுள்ளது.

கொலைகளை பார்த்துள்ளதால் எங்களிற்கு உடல்களை எங்கு தேடவேண்டும் என்பது தெரிந்திருக்கின்றது என மருத்துவபணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த பத்து நாட்களிற்கு மேல் நாங்கள் இங்கு வருகின்றோம் என தெரிவித்துள்ள  அம்புலன்ஸ் சாரதியொருவர்  இன்றே பல உடல்களை மீட்டுள்ளோம் 15 உடல்களை மீட்டுள்ளோம் அவை நோயாளிகள் உடையவை என குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் இஸ்ரேலின் தாக்குதலால் காயமடைந்தவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பெய்ட் லகியாவில் 20 பாலஸ்தீனியர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இங்கு இஸ்ரேலிய படையினரின் நடவடிக்கைகள் இடம்பெற்றதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.சடலங்களாக மீட்கப்பட்டுள்ளவர்களிற்கு கௌரவமான இறுதி மரியாதையை வழங்க முடியும் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply