இஸ்ரேலிய பிரதமர் விமானநிலையத்திற்கு சென்றவேளை ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள்ஏவுகணை தாக்குதல்!

You are currently viewing இஸ்ரேலிய பிரதமர் விமானநிலையத்திற்கு சென்றவேளை ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள்ஏவுகணை தாக்குதல்!

இஸ்ரேலிய இராணுவம் யேமனில் உள்ள ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் நிலைகளின் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

யேமனின்  ஹொடெய்டா நகரம் உட்பட பல நகரங்களில் உள்ள ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் இலக்குகள் மீது தாக்குதலை மேற்கொண்டதாக  இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

விமானதாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ள அதேவேளை துறைமுகங்கள் மற்றும் மின்நிலையங்கள் மீது தாக்குதலை இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேல் தலைநகருக்கு அருகில் உள்ள பென்குரியன் சர்வதேச விமானநிலையத்தை இலக்குவைத்து ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலை மேற்கொணடு;ள்ள நிலையிலேயே இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

இஸ்ரேலிய பிரதமர் விமானநிலையத்திற்கு வருகை தந்தவேளை ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply