இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுக்கு எதிராக இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இஸ்ரேல் நாட்டில் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக பொதுமக்கள் வெளியில் வரும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே மக்களின் ஜனநாயகத்தை பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு நசுக்கிறார் என்று மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று டெல் அவிவ் ராபின் சதுக்கத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் குவிந்தனர். என்றாலும் சமூக இடைவெளியை கடைபிடித்து ஒவ்வொருவரும் சுமார் ஆறு அடி தூரத்திற்கு தள்ளி நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தற்போது கொரோனா வைரஸ் தொற்று நடவடிக்கை காரணமாக போன் பேசுவது ஒட்டுக்கேட்கப்படுகிறது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்