சம்பவத்தின் போது தங்கள் தாயாருடன் இவர்கள் வாகனம் ஒன்றில் பயணித்துள்ளனர். உள்ளூர் பொலிசார் தெரிவிக்கையில், தமது குடும்பம் பயணித்த கார் மீது தாக்குதல் முன்னெடுக்கப்படுவதை அந்த தந்தை இன்னொரு காரில் இருந்து நேரில் பார்த்துள்ளார் என குறிப்பிட்டுள்ளனர்.
பாலஸ்தீன தாக்குதலாளிகளின் தாக்குதலில் 45 வயதான தாய் பலத்த காயம் அடைந்தார். இதனிடையே, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்ட அறிக்கையில், லண்டனில் பிறந்த சகோதரிகளின் பெயரை முதன்முறையாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த தருணங்களில், அந்த குடும்பம் தனது உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதால், முழு இஸ்ரேல் தேசத்துடன் சேர்ந்து, அவர்களின் பாதுகாப்பிற்காக நான் பிரார்த்தனை செய்கிறேன் என பிரதமர் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.
சிறுபான்மையினரின் உரிமைகளை நசுக்கும் மதவாத அரசாங்கம் இந்த நிலையில், கொல்லப்பட்ட சகோதரிகளின் தந்தை குறிப்பிடுகையில், மதவாத அரசாங்கம் சிறுபான்மையினரின் உரிமைகளை நசுக்கி, சர்வாதிகாரமாக மாறிவிடும் என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால் யூதர்கள் அன்பையும் நீதியையும் சமநிலைப்படுத்துவதை நம்புவதால் இஸ்ரேலில் இது ஒரு ஆபத்தான விடயம் அல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாலஸ்தீனத்தின் பெத்லஹேம் நகருக்கு அருகிலுள்ள எஃப்ராட் குடியிருப்பு பகுதியில் வசித்து வந்த குடும்பம் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.
இதனிடையே, வெள்ளிக்கிழமை, இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் தெரு ஒன்றில் கார் மோதிய தாக்குதலில் ஒரு இத்தாலிய நபர் கொல்லப்பட்டார் மற்றும் ஐந்து பிரித்தானிய மற்றும் இத்தாலிய சுற்றுலாப் பயணிகள் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.