இஸ்ரேலுக்கு ஆதரவாக உளவு வேளையில் ஈடுபட்ட ஒரு பெண் உட்பட 4 பேருக்கு ஈரான் அரசு நேற்று தூக்கு தண்டனையை நிறைவேற்றியுள்ளது. இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் அமைப்புக்கு உளவு வேலை பார்த்த 4 பேரை ஈரான் அரசு தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில் அவர்களை 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் கைது செய்தனர்.
அவர்கள் மீது ஆள் கடத்தல், அச்சுறுத்தல், வாகனம் மற்றும் வீடுகளை எரித்தல் மொபைல் போன்களை திருடுதல் ஆகிய குற்றங்களை இஸ்ரேலுக்கு சார்பாக செய்து வந்ததாக குற்ற வழக்கு சுமத்தப்பட்டு நீதிமன்ற விசாரணை நடைபெற்று வந்தது.
இதையடுத்து ஈரான் நாட்டிற்கு எதிராக சதி திட்டத்தில் ஈடுபட்டதாக அவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஈரானுக்கு எதிராக உளவு வேலை பார்த்த ஒரு பெண் உட்பட 4 பேருக்கு ஈரான் நேற்று மரணத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், வஃபா ஹனாரெ, அரம் ஒமார், ரஹ்மான் பர்ஹாசோ மற்றும் நசிம் நமாசி என்ற பெண்ணும் தூக்குத் தண்டனை நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது.