இஸ்ரேலுக்கான தூதரை திரும்பப் பெற்றார் பிரேசில் அதிபர் !

You are currently viewing இஸ்ரேலுக்கான தூதரை திரும்பப் பெற்றார் பிரேசில் அதிபர் !

 

இஸ்ரேலுக்கான பிரேசில் தூதுவரை திரும்பப் பெறுவதாக பிரேசில் அதிபர் அறிவித்துள்ளதாக பிரேசில் அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளதாக அந்த நாட்டு செய்திகளில் வெளியாகியுள்ளது.

ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக போர் பிரகடனம் செய்த இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றது.

பிரேசில் அதிபர் இனாசியோ லுலா டா சில்வா தொடர்ந்து இஸ்ரேலை விமர்சனம் செய்து வந்தார். காசா மீதான தாக்குதலை ஹொலோகாஸ்ட் உடன் ஒப்பிட்டு விமர்சித்தார்.

இதற்காக பொது கண்டனம் தெரிவிக்க பிரேசில் தூதருக்கு இஸ்ரேல் வெளியுறவுத்துறை மந்திரி சம்மன் அனுப்பியிருந்தார். இந்த நிலையில் இஸ்ரேலுக்கான பிரேசில் பிரதமரை திரும்பப் பெறுவதாக பிரேசில் அதிபர் அறிவித்துள்ளார்.

காசா மீதான மனிதாபிமானமற்ற நடவடிக்கைக்கு எதிராகவும் தற்போது வரை அதில் முன்னேற்றம் ஏதும் இல்லை என்பதால் பிரேசில் தூதரை திரும்பப் பெறும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments