இஸ்ரேலின் வான்வழி தாக்குதலில் ஹமாஸின் போர்க்கள தளபதி கொல்லப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பை குறிவைத்து இஸ்ரேலிய படைகள் இன்று லெபனான் முழுவதும் வான்வழி தாக்குதலை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் இன்றைய இஸ்ரேலிய படைகளின் வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 492 ஆக அதிகரித்து இருப்பதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் இன்றைய குண்டு வீச்சு தாக்குதலில் கிட்டத்தட்ட 1600 பேர் படுகாயமடைந்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் லெபனான் மீதான இஸ்ரேலின் இன்றைய வான்வழி தாக்குதலில் ஹமாஸின் போர்க்கள தளபதி கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக ஹமாஸின் ஆயுதப்படை பிரிவு வெளியிட்டுள்ள தகவலில், தெற்கு லெபனான் மீது இன்று இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹமாஸ் போர்கள தளபதி மஹ்மூத் அல் நாடர் (Mahmoud Al Nader) கொல்லப்பட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.