பாலஸ்தீனத்திற்கு(Palestine) ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து இஸ்ரேல்(Israel) தூதர் ஐ.நா.வின் அறிக்கையை கிழித்த காணொளி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போரில் ஐ. நா பார்வையாளராக செயற்பட்டு வருகிறது. இந்நிலையில் பாலஸ்தீனத்தை நிரந்தர உறுப்பினராக்குவதற்கான ஐ. நா தீர்மானமொன்றை கொண்டுவந்துள்ளது.
இதற்கான சர்வதேச வாக்கெடுப்பில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக 143 நாடுகளும், எதிராக 9 நாடுகளும் வாக்கெடுப்பை 25 நாடுகள் புறக்கணித்தும் இருந்தன.
இந்நிலையில், இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த ஐ.நாவிற்கான இஸ்ரேல் தூதர் கிலாட் எர்டான், ஐ.நாவின் அறிக்கை நகலை கிழித்தெறிந்தமையானது பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.