கடந்த ஒக்டோபர் 7ல் இருந்து இதுவரை காசா பகுதி மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட வெஸ்ட் பேங்கில் 11,001 மாணவர்கள் கொல்லப்பட்டதாகவும், 17,772 பேர் காயமடைந்ததாகவும் பலஸ்தீன கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காசாவில் உள்ள மக்கள் ஒரு நாளைக்கு சராசரியாக ஒரு வேளை உணவை மட்டுமே கிடைப்பதாகவும் காசாவுக்கு செல்லும் உதவிகளை இஸ்ரேல் தடுப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பலஸ்தீனத்தின் பொருளாதாரம் வீழ்ச்சியின் விளிம்பில் உள்ள நிலையில் குறிப்பாக ஆக்கிரமிக்கப்பட்ட வெஸ்ட் பேங்கில் வேளையின்மை அதிகரித்து வருவதால், சில தொழிலாளர்கள் பிழைப்புக்காக விவசாயத்தை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.