இஸ்ரேல் பிரதமர் வீட்டின் மீது மீண்டும் குண்டுத் தாக்குதல்!

You are currently viewing இஸ்ரேல் பிரதமர் வீட்டின் மீது மீண்டும் குண்டுத் தாக்குதல்!

மத்திய இஸ்ரேலில் உள்ள சிசேரியா நகரத்தில் நெதன்யாகு வீட்டிற்கு வெளியே உள்ள முற்றத்தில் ஃப்ளேர்ஸ் எனப்படும் தீப்பிழம்புகள் கிளம்பும் Flash Bomb விழுந்து தீ பற்றி எரிந்துள்ளது.

இது தொடர்பான காட்சிகள் தற்போது சமூக வளைத்தளங்களில் வெளியாகி பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தாக்குதல் மிகவும் தீவிரமான விஷயம் எனவும் ஆபத்தை அதிகரிக்கும் செயல் எனவும் இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளதுடன் இது தொடர்பாக விசாரணையும் இஸ்ரேல் பாதுகாப்பு படை மேற்கொண்டு வருகிறது.

எனினும், இந்த தாக்குதலுக்கு பின்னணியில் யார் உள்ளனர் என்ற விவரம் தற்போது வரை வெளியாகவில்லை.

இந்நிலையில், லெபனான் தலைநகர் பெரூட்டில் உள்ள ரசல் நபா பகுதியில் இஸ்ரேல் இன்று அதிரடி வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் செய்தித்தொடர்பாளர் முகமது அய்ப் கொல்லப்பட்டார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply