இஸ்ரேல் மீது படையெடுப்பது உறுதி: கடும் மிரட்டல் விடுத்த துருக்கி!

You are currently viewing இஸ்ரேல் மீது படையெடுப்பது உறுதி: கடும் மிரட்டல் விடுத்த துருக்கி!

லிபியா மற்றும் அசர்பைஜான் பிராந்தியம் மீது முன்னர் படையெடுத்தது போன்று இஸ்ரேலுக்குள் நுழையும் நிலை ஏற்படும் என துருக்கி ஜனாதிபதி எர்டோகன் கடும் மிரட்டல் விடுத்துள்ளார். ஆனால் அவரது திட்டம் என்ன என்பது தொடர்பில் அவர் விளக்கமளிக்கவும் மறுத்துள்ளார். காஸா மீதான இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருபவர் எர்டோகன்.

தமது நாட்டின் பாதுகாப்புத் துறையைப் பாராட்டி முன்னெடுத்த ஒரு உரையின் போது காஸா போர் தொடர்பில் விவாதிக்கத் தொடங்கினார். நாம் மிக வலிமையுடன் இருந்தால் இஸ்ரேல் இதுபோன்ற மோசமான செயல்களை பாலஸ்தீன மக்களுக்கு செய்திருக்காது.

லிபியா மற்றும் அசர்பைஜான் பிராந்தியம் மீது முன்னர் படையெடுத்தது போன்று இஸ்ரேல் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எர்டோகன் தெரிவித்துள்ளார். மேலும், இதை நாம் செய்ய முடியாது என்பதற்கு எந்த காரணமும் இல்லை என குறிப்பிட்டுள்ள எர்டோகன், நாம் வலிமையடைந்தால், இதுபோன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என்றார்.

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தது போன்று, தற்போது பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது துருக்கி படையெடுக்க இருப்பதாக வெளியான தகவல், இஸ்ரேல் – ஹமாஸ் போரில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் எர்டோகன் தெரிவித்துள்ள கருத்துக்கு உடனடியாக பதிலளிக்க இஸ்ரேல் மறுத்துள்ளது. கடந்த 2020ல் ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்ட லிபியாவின் தேசிய உடன்படிக்கை அரசாங்கத்திற்கு ஆதரவாக துருக்கி இராணுவ வீரர்களை லிபியாவிற்கு அனுப்பியது.

மேலும், Nagorno-Karabakh பகுதியில் அசர்பைஜான் முன்னெடுத்த ராணுவ நடவடிக்கைகளில் தங்களுக்கு எவ்வித நேரடி தொடர்பும் இல்லை என்றே துருக்கி கூறி வந்தது.

ஆனால் கடந்த ஆண்டு இந்த விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள துருக்கி, தங்களின் நெருக்கமான நட்பு நாட்டிற்கு அனைத்து வகையான உதவிகளும் முன்னெடுத்ததாக தெரிவித்திருந்தது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments