இஸ்ரேல், ஹமாஸ் போரில் உயிரிழந்த பலஸ்தீனர்களின் எண்ணிக்கை 51,000ஐ கடந்துவிட்டதாக காஸா சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கடந்த 24 மணி நேரத்தில், இஸ்ரேல் நடத்திய பீரங்கி தாக்குதலில் பலஸ்தீனர்கள் 17 பேர் கொல்லப்பட்டனர்.
ஹமாஸ் அமைப்பினர் 10 பணயக் கைதிகளை விடுவித்தால் 45 நாட்களுக்கு போரை நிறுத்தி, நிவாரண பொருட்களை காஸாவுக்குள் அனுமதிக்க இஸ்ரேல் சம்மதம் தெரிவித்திருந்தது. அதனை பரீசிலிக்க ஹமாஸ் தரப்பில் 48 மணி நேரம் அவகாசம் கோரப்பட்டுள்ளது.