ஈனப்பிறவி டக்கிளசை விளாசி வீசிய தன்மானத்தமிழன்!

You are currently viewing ஈனப்பிறவி டக்கிளசை விளாசி வீசிய தன்மானத்தமிழன்!

https://www.youtube.com/watch?v=hAVhtB13yew

இன்று நாடாளுமன்றத்தில்   வரவு- செலவுத்திட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய செல்வராசா கஜேந்திரன்  மாவீரர்களுக்கு தலைவணங்கி வணக்கம் தெரிவித்துக் கொண்டார்.

தனதுரையை தொடர்ந்த அவர் ஒரு கட்டத்தில் “மேதகு பிரபாகரன்” என விளித்து கூறிவிட்டார். இதன்போது சபையில் இருந்த ஆளும் தரப்பு உறுப்பினர்களில் சிலர்  ஒழுங்குப் பிரச்சினைகளை எழுப்பினர்.

அப்போதுஇ சபைக்கு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ​​​வேலுகுமார் தலைமைத்தாங்கிக் கொண்டிருந்தார்.

முதலாவதாக ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பிய ஆளும் கட்சியின் பெண் உறுப்பினரை பார்த்து  “ வீடு கொளுத்தும் ராசாக்களுக்கு நெருப்பெடுக்கும் மந்திரிகளாக இருக்கவேண்டாம்” எனவும் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில்இ தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின்  தலைவர் பிரபாகரன் போதைப்பொருள் வர்த்தகர் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறிய கருத்து கடும் கண்டனத்தை தெரிவித்து உரையாற்றிய செல்வராசா கஜேந்திரன் எமது தேசத்தின் விடுதலைக்காக முப்பது ஆண்டுகள் ஆயுதமேந்தி போராடியிருந்த எமது தேசத்தின் தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் என்றார்.  

இதனையடுத்தே ஆளும் தரப்பினர் “இலங்கையில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பின் தலைவரை தேசிய தலைவர் என செல்வராசா கஜேந்திரன் எம்.பி கூறியதாக   கடும் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதால் சபையில் பெரும் சர்ச்சை ஏற்பட்டிருந்ததோடு கஜேந்திரனின் உரையை ஹன்சாட்டில் இருந்து நீக்க வேண்டும் எனவும் தொடர் கோரிக்கைகளை முன்வைத்தனர்.

இதன்போது உரையாற்றிய கஜேந்திரன் எம்.பி வடக்கில் போதைப்பொருள் அதிகரித்து வருகின்றதை சுட்டிகாட்டி பேசிய கூட்டமைப்பு எம்.பி. ஸ்ரீதரனின் உரையை பார்த்து பொறுத்துகொண்டிருக்க முடியாத இராணுவ துணைக்குழுவின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தமிழர்களுக்காக ஆயுதம் ஏந்தி போராடிய எம் தேசத்தின் தலைவர் பிரபாகரனை போதைப்பொருள் வர்த்தகர் என கூறியதையும் வன்மையாக கண்டித்தார். .

இதன்போது ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய இராஜாங்க அமைச்சர் சீத்தா அரம்பேபோல அதியுயர் சபையில் பயங்கரவாதி ஒருவரை தேசிய தலைவராக சித்தரித்து பேசுகின்றார். உங்களுக்கு (வேலுகுமார்) மொழிப்பிரச்சினை இல்லை.  கஜேந்திரன் எம்.பி கூறிய விடயங்கள் விளங்காமல் இருந்திருக்காது. ஆகவே அதனை ஹன்சார்ட்டில் இருந்து நீக்குங்கள் என்றார்.

இதன்போது பதிலளித்த வேலுகுமார் எம்.பி செல்வராசா கஜேந்திரனுக்கு உள்ள கருத்தை வெளிப்படுத்தும் சுதந்திரத்தில் என்னால் தலையிட முடியாது. நான் எப்படி அதில் தலையிட முடியும்? எவ்வாறாயினும் உங்களின் கோரிக்கையை சபாநாயகரின் கவனத்துக்குக் கொண்டு செல்கிறேன் என்றார்.

இதன்போது ஆளுங்கட்சி உறுப்பினர்கள் வேலுகுமார் எம்.பியுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டனர்.

ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய ஆளுந்தரப்பு உறுப்பினர் மொஹம்மட் முஸாம்மில் எம்.பிஇ விடுதலைப் புலிகள் அமைப்பு இலங்கையில் தடைசெய்யப்பட்ட இயக்கம். இந்த நாட்டில் இலட்சக்கணக்கான மக்களை கொலைசெய்த ஒருவரை வீரராக்கிஇ இச் சபையில் பேச முடியாது. குறித்த பாராளுமன்ற உறுப்பினரின் கருத்து மக்கள் மத்தியில் வைராக்கியத்தை பரப்பும். இவ்வாறான உரைகளை சபையில் அனுமதிக்க முடியாது. எனவே உரையை ஹன்சாட்டில் இருந்து நீக்குங்கள் என்றார்.

உங்கள்இ கோரிக்கையை சபாநாயகரின் கவனத்துக்கு கொண்டு செல்கிறேன் என வேலுகுமார் எம்.பி பதிலளித்தார்.

எனினும்இ மீண்டும் குறுக்கீடு செய்த முஸாம்மில் எம்.பி இப்போது நீங்கள் தான் சபையை வழிநடத்துகிறீர்கள். எனவே சபாநாயகர் வந்து இதனை ஹன்சாட்டிலிருந்து நீக்க வேண்டியதில்லை. அதற்கான அதிகாரம் உங்களுக்கு இருக்கிறது. ஹன்சாட்டில் இருந்து அதனை நீக்குங்கள் என்றார்.

என்னால் சபாநாயகருக்கு முறையிட மட்டுமே முடியும் எனது அதிகார பரப்புக்குற்பட்ட விடயங்களையே என்னால் செய்ய முடியும் என வேலுகுமார் மீண்டும் பதிலளித்தார்.

இதன்போது குறுக்கீடு செய்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பிஇ  இந்த சபையில் பல்வேறு கருத்துக்கள் வெளிப்படுத்தப்படுகின்றன. ஒரு சிலரது கருத்துக்களை சிலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றால் அதனை நிராகரிக்க முடியாது. பல்வேறு சமூகத்தின் பிரதிநிதிகளாக இங்கு பலர் உள்ளனர். ஒரு உறுப்பினர் அவரது நிலைப்பாட்டை முன்வைக்கின்ற நிலையில்இ அவரின் குரலை மௌனிக்க இடமளிக்க கூடாது என்றார்.

பெரும்பான்மை உறுப்பினர்களுக்கு அவரது கருத்து பிடிக்கவில்லை என்பதற்காக அவரது குரலை மௌனிக்க செய்யக்கூடாது என்பதை கேட்டுக்கொள்கின்றேன் எனவும் கூறினார்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உள்ள வரப்பிரசாதங்களை பயன்படுத்தி பயங்கரவாத தலைவர் ஒருவரை தேசிய தலைவராக சபையில் சித்தரிக்க முடியாது. பிரபாகரனை நெல்சன் மண்டேலாஇ மகாத்மா காந்தியுடன் ஒப்பிடவே இவர்கள் முயற்சிக்கிறார்கள். ஆனால் பிரபாகரன் ஒரு கொலைகாரன்இ பயங்கரவாதி. இதனை விளங்கிக்கொள்ள வேண்டும் என ஆளுங்கட்சி பின்வரிசை எம்.பிகள் கூறினார்கள்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply