ஈராக்கிலுள்ள இரண்டு அமெரிக்க கூட்டுப்படைத்தளங்கள்மீது ஈரான் ஏவுகணைத்தாக்குதல்களைநடாத்தியுள்ளதாக ஜேர்மனிய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதனை உறுதிப்படுத்தியுள்ள நோர்வே இராணுவத்தலைமையகம், தாக்குதலுக்குள்ளானமுகாம்களில் நோர்வே இராணுவத்தினரும் இருந்ததாக தெரிவித்துள்ளது.
ஈரானிய இராணுவத்தளபதி அமெரிக்காவால் படுகொலை செய்யப்பட்டதையடுத்து, அமெரிக்கநிலைகள்மீது பதில் தாக்குதல் நடாத்துவதாக ஈரான் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்திலையில் இன்று இத்தாக்குதல்கள் நடைபெற்றதாகவும், குறித்த இரு அமெரிக்க தளங்களும்முற்றாக அழிக்கப்பட்டதாகவும் ஈரான் அறிவித்திருந்தாலும், இராணுவத்தளங்களுக்கு ஏற்பட்டசேதவிபரங்களை இதுவரை உறுதிப்படுத்த முடியவில்லையென மேற்குலக ஊடகங்கள்தெரிவித்துள்ளன.
இதேவேளை, தாக்குதல்கள் தொடருமென ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.