ஈராக் தலைநகர் பாக்தாத்தின் அதிக பாதுகாப்பு மிகுந்த பகுதியில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்தை குறிவைத்து நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலில் இரண்டு பொதுமக்கள் காயமடைந்தனர். குறைந்தது நான்கு ராக்கெட்டுகள் ஏவப்பட்டதாகவும் ஒன்று அருகிலுள்ள பள்ளியைத் தாக்கியதாகவும் ராணுவ வட்டாரத்தில் கூறப்படுகிறது.
உள்ளூர் நேரப்படி வியாழன் மாலை பாக்தாத்தில் இருந்து பகிரப்பட்ட வீடியோக்களில் குறித்த தாக்குதல் சம்பவம் பதிவாகியிருந்தது.
மூன்று ஏவுகணைகள் அமெரிக்க தூதரக எல்லைக்குள் தாக்கியதாகவும், ஒன்று அருகிலுள்ள குடியிருப்பு வளாகத்தில் உள்ள பள்ளியைத் தாக்கியது என தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலில் ஒரு பெண்ணும் சிறுமியும் காயமடைந்ததாக கூறப்படுகிறது. மேலதிக விவரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை என்றே கூறப்படுகிறது.
இந்த ராக்கெட்டுகள் பாக்தாத்தின் டோரா பகுதியில் இருந்து ஏவப்பட்டதாக ஈராக் ராணுவம் தெரிவித்துள்ளது.