ஈராக்கிய மண்ணில் நிலைகொண்டிருக்கும் நேசநாட்டுப்படைகளின் இராணுவப்பயிற்சிகள் அனைத்தையும், உடனடியாக நிறுத்துவதற்கான உத்தரவினை அவ்வமைப்பின் தலைவரும், நோர்வேயின் முன்னாள் பிரதமருமான “Jens Stoltenberg” விடுத்துள்ளார்.
ஈரானிய இராணுவத்தளபதி, அமெரிக்காவால் படுகொலை செய்யப்பட்டதன் பின் மத்தியகிழக்கில் ஏற்பட்டுள்ள இறுக்கமான நிலைமைகள் தொடர்பில் கூடி ஆராய்ந்த “NATO” நாடுகளுடனான சந்திப்பின் இறுதியில் கருத்துதெரிவித்த “Jens Stoltenberg”, ஈராக்கிய மண்ணில் அனைத்து இராணுவப்பயிற்சிகளும் நிறுத்தப்படுவதாக தெரிவித்துள்ளதோடு, ஈரானிய இராணுவத்தளபதி மீதான படுகொலையானது அமெரிக்காவின் சொந்தமுடிவு மாத்திரமே என்றும், இப்படுகொலை நடவடிக்கைக்கும், நேசநாடுகளுக்கும் எவ்விதமான தொடர்புகளும் இல்லையெனவும் தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள நிலைமைகள் தொடர்பில் ஈரான் அமைதி காக்கவேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்திருந்தாலும், படுகொலைக்கான பழிதீர்க்கும் தமது முடிவில் மாற்றமில்லையென ஈரான் தெரிவித்துள்ளது.
இதேவேளை, அமெரிக்க அதிபர் “டொனால்ட் ட்ரம்” பை கொலை செய்பவர்களுக்கு 80 மில்லியன் டொலர்களை பரிசாக வழங்குவதாகவும் ஈரான் அறிவித்திருக்கிறது.