ஈரானில் வீழ்ந்து நொருங்கிய உக்ரைன் நாட்டின் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக காணொளிஆதாரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 176 உயிர்களை காவு வாங்கிய இவ்விமான விபத்திற்கு, இயந்திரக்கோளாறே காரணமென முதற்கட்டத்தகவல்கள் வெளிவந்திருந்தன.
எனினும், இவ்விமானம் ஈரானிய ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாகவும், தவறுதலாகஇவ்விமானம் சுடப்பட்டிருக்கலாமெனவும் தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன.
விபத்திற்குள்ளான விமானத்தின் “கறுப்பு பெட்டி”யை ஈரான் தரமறுத்துள்ள நிலையில், அமெரிக்காவும், கனடாவும் இணைந்து விபத்து தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.