ஈரான், ஈராக் வான்பரப்பை தவிர்க்குமாறு சர்வதேச நாடுகளுக்கு அறிவுறுத்தல்!

  • Post author:
You are currently viewing ஈரான், ஈராக் வான்பரப்பை தவிர்க்குமாறு சர்வதேச நாடுகளுக்கு அறிவுறுத்தல்!

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையில் எழுந்துள்ள பதற்ற நிலைமையை அடுத்து ஈரான், ஈராக் வான் பறப்பினூடாக பயணம் மேற்கொள்வதை தவிர்க்குமாறு சர்வதேச நாடுகள் தமது விமானச் சேவைக்கு அறிவுறுத்தியுள்ளன.

அதேவேளை பல்வேறு ஆசிய விமானசேவை நிறுவனங்கள் தமது விமானப்போக்குவரத்தின் போது ஈரான் வான்பரப்பைத் தவிர்த்திருப்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அத்தோடு ஈராக்கின் அமெரிக்கத் தளங்கள் மீதான நடத்திய வான்வழித் தாக்குதல்களை அடுத்தே இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

அதேவேளை தாய்வானின் சீனா எயார்லைன்ஸ் நிறுவனமும் தமது விமானங்கள் ஈராக், ஈரான் வான்பரப்பின் ஊடாகப் பயணிக்காது என சர்வதேச செய்திச்சேவைகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள