ஈழத்தின் பிரபல தபேலாக் கலைஞர் சதா வேல்மாறன் காலமானார்!

You are currently viewing ஈழத்தின் பிரபல தபேலாக் கலைஞர் சதா வேல்மாறன் காலமானார்!

ஈழத்தின் மூத்த பிரபல்யமான தபேலா வாத்தியக் கலைஞர் சதா வேல்மாறன் நேற்று யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

கொரோனா அறிகுறிகள் தென்பட்ட நிலையில் அவர் வைத்தியசாலைக்குச் சென்றபோதே சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

விடுதலைப்போராட்ட காலத்தில் ஒலிப்பதிவாகிய கணிசமான பாடல்கள், பெருமளவான பக்திப்பாடல்களுடன் ஆயிரக்கணக்கான அரங்க நிகழ்வுகளிலும் அவர் அணி இசை செய்துள்ளார்.

பல்வேறு சந்தர்ப்பங்களில் விடுதலைப்புலிகளின் தலைவரால் விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை நூற்றுக்கணக்கான மாணவர்களையும் மிருதங்க, தபேலாக் கலைஞர்களாகவும் உருவாக்கிய பெருமைக்குரியவராகவும் விளங்கியுள்ளார்.

அவருடைய இழப்பு ஈழத்தின் இசைத் துறைக்கு பேரிழப்பு என்கின்றனர் சக கலைஞர்கள்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply