உக்கிரமடையும் போர் சூழல் : அவசர நிலையை அறிவித்த ரஷ்யா !

You are currently viewing உக்கிரமடையும் போர் சூழல் : அவசர நிலையை அறிவித்த ரஷ்யா !

ரஷ்யாவின் இராணுவ சேமிப்பகம் ஒன்றின் மீது உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில், அங்கிருந்த வெடிப்பொருட்கள் வெடித்துச் சிதறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உக்ரைன் தாக்குதலால் அந்த சேமிப்பகம் வெடித்துச் சிதறத் தொடங்கியதையடுத்து, ரஷ்யாவின் Ostrogozhsky மாகாணத்தில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவிலுள்ள Voronezh என்னுமிடத்தில், ஆயுதங்கள் சேமிப்பகம் ஒன்று உள்ள நிலையில் உக்ரைன் அந்த சேமிப்பகம் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

இதன்போது காமிகேஸ்( kamikaze)  வகை ட்ரோன் மூலம் அந்த சேமிப்பகத்தில் உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த தாக்குதலில் அந்த சேமிப்பகம் தீப்பற்றியதும், அங்கு சேமித்துவைக்கப்பட்டிருந்த வெடிப்பொருட்கள் வெடிக்கத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் அங்குள்ள Soldatskoye என்னும் கிராமத்தில் வாழும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் 50 மைல் தொலைவிலுள்ள வேறொரு பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

மேலும், அவர்கள் தற்காலிக தங்கும் இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதோடு, வெடி விபத்தால் எந்த அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது என்பது இதுவரை தெரியவரவில்லை.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply