உக்ரைன் தலைநகர் கீவுக்கு தெற்கே உள்ள பாடசாலை மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் 3 பேர் வரை கொல்லப்பட்டனர். மேலும் ஏழு பேர் காயமடைந்தனர். இந்த நிலையில் Zaporizhzhia நகரில் உள்ள குடியிருப்பு பகுதிகள் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. சாதாரண மக்கள் மற்றும் குழந்தைகள் வசிக்கும் பகுதியில் நடந்த இந்த தாக்குதலில் ஒருவர் இறந்ததாக உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த கொடூர தாக்குதலினால் கட்டிடங்கள் பற்றி எரிந்தன. இதுதொடர்பான வீடியோவை உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி பகிர்ந்துள்ளார். அத்துடன், இது கண்டிப்பாக உக்ரைனில் மற்றொரு நாளாக இருக்கக் கூடாது அல்லது உலகின் வேறெங்கும் நடக்கக் கூடாது.
ரஷ்ய பயங்கரவாதத்தை விரைவாக தோற்கடிக்கவும், உயிர்களைப் பாதுகாக்கவும் உலகிற்கு அதிக ஒற்றுமையும், உறுதியும் தேவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.