உக்ரைனின் 22 வயதேயான தாயாரை ரஷ்ய துருப்புகள் கூட்டு வன்புணர்வுக்கு இரையாக்கியுள்ளதுடன், அவரின் பிஞ்சு மகளின் கண்முன்னே மொத்த கொடூரமும் அரங்கேறியுள்ளதாக ஐ.நா அறிக்கையில் அம்பலமாகியுள்ளது. உக்ரைனின் Chernihiv பிராந்தியத்தில் ஊனமுற்ற கணவரின் முன்னிலையில் 83 வயது பெண்மணியை ரஷ்ய துருப்புகள் துஸ்பிரயோகம் செய்துள்ளதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கீவ் பிராத்தியத்தில் உள்ள கிராமம் ஒன்றில், குடியிருப்புக்குள் அத்துமீறி நுழைந்த ரஷ்ய ராணுவத்தினர் மூவர் 56 வயதான பெண்மணியை சீரழித்துள்ளனர். ரஷ்ய ராணுவத்தினர் வன்புணர்வு நடவடிக்கைகளை ஒரு ஆயுதமாகவே பயன்படுத்தி வந்துள்ளனர்.
மட்டுமின்றி, விசாரணை ஏதுமின்றி பலர் கொல்லப்பட்டுள்ளதும், அதில் 14 வயது சிறுவன் உட்பட பலர் இரையாகியுள்ளதும் ஐ.நா அறிக்கையில் அம்பலமாகியுள்ளது. பெண்கள் மற்றும் சிறுமிகளை வீடு புகுந்து சீரழித்துள்ளதுடன், சில சந்தர்ப்பங்களில் கடத்திச் சென்று ஆள் நடமாட்டமற்ற பகுதியில் வைத்து சீரழித்துள்ளனர்.
இதனால் பாதிக்கப்பட்ட சிலர் தற்கொலை செய்து கொண்டுள்ளதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 22 வயதேயான பெண் ஒருவரின் குடியிருப்புக்குள் அத்துமீறிய ரஷ்ய ராணுவத்தினர், அவரது கணவரையும் பாலியல் துன்புறுத்தலுக்கு இரையாக்கியுள்ளதுடன், குறித்த இளம் தாயாரையும் கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.
இதுபோன்ற கொடூரங்களே பெரும்பாலும் ரஷ்ய ராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளதும் அம்பலமாகியுள்ளது. போர் நடக்கும் நாட்டில் பெண்கள் வன்புணர்வுக்கு இலக்காவது ஆயுதமாகவே பார்க்கப்படுகிறது.
1992ல் போஸ்னியாவிலும், 1994ல் ருவாண்டாவிலும் 2003ல் டார்ஃபரிலும் வன்புணர்வை ஆயுதமாக பயன்படுத்தியுள்ளனர். இரண்டாம் உலகப் போரின் போது சோவியத் ரஷ்ய ராணுவமானது 2 மில்லியன் ஜேர்மன் பெண்களை சீரழித்துள்ளது.
இருப்பினும், சீரழிக்கப்படும் பெண்களின் உண்மையான எண்ணிக்கை எப்போதும் வெளிவருவதில்லை என்றே கூறப்படுகிறது.