ரஷ்யாவுடனான இராணுவ மோதலில் உக்ரைனால் வெல்ல முடியாது என, இளைப்பாறிய அமெரிக்க இராணுவ அதிகாரியான “Daniel Davis” குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைனின் “Donbas” பகுதியில் ரஷ்ய இராணுவ நகர்வுகளின் நுட்பங்களை ஆராய்ந்த, அமெரிக்க இராணுவப்பணியில் 21 வருடங்கள் அனுபவம் கொண்ட மேற்படி இளைப்பாறிய இராணுவ அதிகாரி, ரஷ்ய துருப்பினரின் முன்நகர்வு உத்திகள், ரஷ்ய இராணுவ பலம், ரஷ்ய அதிபரின் விட்டுக்கொடுக்காத தன்மை உள்ளிட்ட விடயங்கள் கவனிக்கத்தக்கவை என்றும், இவற்றினடிப்படையில் ஆராயும்போது, நீண்டகால அடிப்படையில் இந்நிலை நீடிக்குமானால், மிகவும் அடிமட்ட நிலைக்கு உக்ரைன் செல்லும் எனவும், அதே நேரம் ரஷ்யாவை உக்ரைனால் வெல்ல முடியாது என்பதே உண்மை எனவும் கருத்துரைத்துள்ளார்.