உக்ரைன் பகுதியில் அமைந்துள்ள Zaporizhzhia அணுமின் நிலையத்தில் போலியான விபத்தினை ஏற்படுத்தி, பழியை உக்ரைன் மீது சுமத்தும் திட்டத்தை ரஷ்யா வகுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. Zaporizhzhia அணுமின் நிலையமானது ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள தென்பகுதி உக்ரைனில் அமைந்துள்ளது. ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையம் என கூறப்படும் இப்பகுதியானது இரு தரப்பினரும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டும் வகையில் ஷெல் தாக்குதல்களை மீண்டும் மீண்டும் முன்னெடுக்கப்படுகிறது.