உக்ரைனின்  குற்றச்சாட்டை மொத்தமாக மறுத்துள்ள ரஷ்யா,

You are currently viewing உக்ரைனின்  குற்றச்சாட்டை மொத்தமாக மறுத்துள்ள ரஷ்யா,

உக்ரைனில் உள்ள ஜபோரிஜியா அணுமின் நிலையத்தின் மீது ரஷ்யா தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவலை அடுத்து, அப்பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கானோர் தப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த தகவலை நகர மேயர் டிமிட்ரோ ஓர்லோவ் உறுதி செய்துள்ளதுடன், ரஷ்யர்கள் கொடூர திட்டத்துடன் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், உள்ளூர் மக்கள் வெளியிட்ட தகவலில், ரஷ்ய தரப்பு மீண்டும் தாக்குதல் தொடங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

இதனிடையே, புடினுக்கு நெருக்கமானவரும் முன்னாள் ரஷ்ய ஜனாதிபதியுமான டிமித்ரி மெத்வெதேவ் தெரிவிக்கையில், ஐரோப்பா கண்டத்தின் அணுமின் நிலையங்கள் விபத்துகளை சந்திக்க நேரிடும் என்று ஐரோப்பிய தலைவர்களுக்கு மறைமுக எச்சரிக்கை விடுத்திருந்தார்.

மேலும், அணுமின் நிலைய சுற்றுவட்டாரத்தில் இருந்து ரஷ்ய துருப்புகள் துப்பாக்கிச் சூடு நடத்துவதாகவும், ஆனால் திருப்பி தாக்க முடியாத சூழல் எனவும் உக்ரைன் தரப்பு தெரிவித்திருந்தது.

ஆனால் உக்ரைனின் இந்த குற்றச்சாட்டை மொத்தமாக மறுத்துள்ள ரஷ்யா, இதுவெறும் இட்டுக்கட்டிய கதை எனவும் தெரிவித்துள்ளது.

இதனிடையே, ஜபோரிஜியா அணுமின் நிலையத்தின் சுற்றுவட்டாரத்தில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பு கருதி அங்கிருந்து வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply