உக்ரைனின் செவெரோடோனெட்ஸ்க் நகரின் புறநகர்ப் பகுதிகளுக்குள் ரஷ்ய படைகள் நுழைந்துவிட்டாத லுஹான்ஸ்க் பிராந்திய ஆளுநர் செர்ஜி கர்டாய் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீதான ரஷ்ய ராணுவத்தின் தாக்குதல் வடக்கு பகுதிகளில் இருந்து பின்னகர்த்தப்பட்டு தற்போது கிழக்கு உக்ரைன் மீது மையப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், உக்ரைனின் கிழக்கு பகுதி நகரான செவெரோடோனெட்ஸ்க்-கின் புறநகர்ப் பகுதிகளுக்குள் ரஷ்ய ராணுவம் நுழைந்துவிட்டதாகவும், அப்போது நடத்தப்பட்ட ஷெல் தாக்குதலில் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 5 பேர் வரை படுகாயமடைந்து இருப்பதாக லுஹான்ஸ்க் பிராந்திய ஆளுநர் செர்ஜி கர்டாய் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ரஷ்ய ராணுவப் படையினர் நகரின் தென் கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளுக்குள் நுழைய முயற்சித்த போது பயங்கர வான் தாக்குதல் ஆயுதங்களை பயன்படுத்தியதாக செர்ஜி கர்டாய் தெரிவித்துள்ளார்.
மேலும், உக்ரைனிய ராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் செவெரோடோனெட்ஸ்க்-கின் அண்டை நகரான Lysychansk இல் இருந்து பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.