உக்ரைனிற்கு மேற்குலகநாடுகள் தங்கள் படையினரை அனுப்பக்கூடும்! பிரான்ஸ்

You are currently viewing உக்ரைனிற்கு மேற்குலகநாடுகள் தங்கள் படையினரை அனுப்பக்கூடும்!  பிரான்ஸ்

breaking

உக்ரைனிற்கு மேற்குலகநாடுகள் தங்கள் படையினரை அனுப்பக்கூடும் என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன்  தெரிவித்துள்ளார்.

பாரிசில் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களின் கூட்டத்தின் பின்னர் மக்ரோன் இதனை தெரிவித்துள்ளார்

இந்த சந்திப்பில் உக்ரைனிற்கு மேற்குலக நாடுகள் படையினரை அனுப்புவது குறித்து ஆராயப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்றுமாலைவரை படையினரை உக்ரைனிற்கு அனுப்புவது குறித்து எந்த இணக்கப்பாடும் எட்டப்படவில்லை ஆனால் இதற்கான வாய்ப்புகளை தவிர்க்க முடியாது என பிரான்ஸ் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ரஸ்யா யுத்தத்தில் வெல்வதை தடுப்பதற்காக எங்களால் ஆனா அனைத்தையும் செய்வோம் என தெரிவித்துள்ள பிரான்ஸ் ஜனாதிபதி நான் இதனை மிகுந்த உறுதிப்பாட்டுடன் தெரிவிக்கின்றேன்எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேற்குலக படையினரை  ஒருபோதும் உக்ரைனிற்கு அனுப்பகூடாது என்று அன்று சொன்னவர்கள்   விமானங்களையும் ஏவுகணைகளையும் டிரக்குகளையும் அனுப்பகூடாது எனவும் சொன்னார்கள் தற்போது உக்ரைனிற்கு அதிகளவு ஏவுகணைகள் டாங்கிகளை அனுப்பவேண்டும் என  தெரிவிக்கின்றனர் எனவும் பிரான்ஸ் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

உக்ரைனிற்கு ஏவுகணைகள் குண்டுகளை அனுப்புவதற்கான புதிய கூட்டணியை உருவாக்கவுள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply