சுதந்திர நாடுகளாக அங்கீகரிக்கப்பட்ட உக்ரைனிலிருந்து பிரிந்த பிராந்தியங்களில் அமைதி காக்கும் நடவடிக்கையை தொடங்க ரஷ்யா இராணுவத்திற்கு புடின் உத்தரவிட்டுள்ளார். ரஷ்யா ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் உக்ரைனிலிருந்து பிரிந்த Donetsk மற்றும் Luhansk குடியரசுகளாக ரஷ்யா அங்கீகரிக்கும் என்று புடின் அறிவித்தார்.
ரஷ்ய ஆதரவு பிராந்தியங்களுடனான ஒத்துழைப்பு மற்றும் நட்புறவு தொடர்பான ஒப்பந்தங்களில் புடின் கையெழுத்திட்டார்.
இதனையடுத்து, சிறிது நேரத்தில் வெளியான இரண்டு உத்தியோகபூர்வ ஆணைகளில், அமைதியைக் காக்க இரு பிராந்தியங்களிலும் துருப்புக்களை அனுப்புமாறு ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு புடின் உத்தரவிட்டுள்ளார்.
இரண்டு குடியரசுகளுடன் தூதரக உறவுகளை நிறுவ ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்திற்கு புடின் உத்தரவிட்டுள்ளார்.
புடின் அனுப்பிய படையின் அளவு குறித்து எந்த தகவலும் இல்லை, ஆனால் உக்ரைனிலிருந்து பிரிந்த பகுதிகளில் ராணுவ தளங்களை கட்ட ரஷ்யாவிற்கு உரிமை உள்ளது என்றும், அமைதியை நிலைநாட்டுவதே துருப்புக்களின் பணியாக இருக்கும் என்றும் அந்த ஆணையில் கூறப்பட்டுள்ளது.