உக்ரைனில் இருந்து தானியங்களுடன் வெளியேறியது முதல் கப்பல்!

You are currently viewing உக்ரைனில் இருந்து தானியங்களுடன் வெளியேறியது முதல் கப்பல்!

உக்ரைனின் ஒடேசா துறைமுகத்தில் இருந்து தானியங்களை ஏற்றிச் செல்லும் முதல் சரக்கு கப்பல் வெளியேறியதாக அந்த நாட்டின் உள்கட்டமைப்பு அமைச்சர் ஒலெக்சாண்டர் குப்ராகோவ் தெரிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி 24ம் திகதி தொடங்கிய உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையை தொடர்ந்து, கருங்கடல் துறைமுகங்களில் இருந்து உலக நாடுகளுக்கு வெளியேற வேண்டி இருந்த பல மில்லியன் டன் உணவுத் தானியங்கள் ரஷ்ய படைகளால் தடுத்து நிறுத்தப்பட்டன.

இதனைத் தொடர்ந்து உலக அளவில் ஏற்பட்ட உணவு பொருள்களின் தட்டுபாடு மற்றும் விலையேற்றம் காரணமாக பில்லியன் கணக்கான மக்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாதிப்படைந்தனர்.

இதையடுத்து, உக்ரைன், ரஷ்யா, துருக்கி மற்றும் ஐக்கிய நாடுகள் ஆகியவை உக்ரைனின் கருங்கடல் துறைமுகங்களில் இருந்து தானியங்களை வெளியேற்றுவது தொடர்பான ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டன.

இந்தநிலையில், போர் தொடங்கியதற்கு பிறகு உக்ரைனின் ஓடேசா துறைமுகத்தில் இருந்து தானியங்களை ஏற்றிச் செல்லும் முதல் சரக்கு கப்பல் வெளியேறியதாக அந்த நாட்டின் உள்கட்டமைப்பு அமைச்சர் ஒலெக்சாண்டர் குப்ராகோவ் தெரிவித்துள்ளார்.

இதுக்குறித்து ட்விட்டரில் அவர் தெரிவித்துள்ள கருத்தில் ரஷ்ய ஆக்கிரமிப்பிற்குப் பிறகு முதல் தானியக் கப்பல் துறைமுகத்தை விட்டு வெளியேறியது.

எங்கள் அனைத்து கூட்டாளி நாடுகளின் ஆதரவு மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் உதவியுடன் இஸ்தான்புல்லில் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தை முழுமையாக செயல்படுத்த முடிந்தது எனத் தெரிவித்துள்ளார்.

தற்போது வெளியேறியுள்ள முதல் கப்பலில் 26,000 டன் சோளம் வெளியேறி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் துறைமுகங்களைத் திறப்பது பொருளாதாரத்தில் குறைந்தபட்சம் 1 பில்லியன் அமெரிக்க டாலர் அந்நியச் செலாவணி வழங்கும் என்றும் விவசாயத் துறைக்கு அடுத்த ஆண்டு விதைப்பு பருவத்தைத் திட்டமிடுவதற்கான வாய்ப்பை வழங்கும் என்றும் அமைச்சகத்தின் மற்றொரு தனி அறிக்கையில் குப்ரகோவ் தெரிவித்துள்ளார்.

இத்துடன் ஒடேசா துறைமுகங்களில் ஏற்கனவே 16 கப்பல்கள் தன் வரிசைகாக காத்து இருப்பதாகவும் தெரிவித்தார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply