உக்ரைனில் முன்னேறும் ரஷ்யப்படைகள்! பிரித்தானிய உளவுத்துறை அறிக்கை!!

You are currently viewing உக்ரைனில் முன்னேறும் ரஷ்யப்படைகள்! பிரித்தானிய உளவுத்துறை அறிக்கை!!

உக்ரைனிய பிரதேசங்களில் ரஷ்யப்படைகள் முன்னேறி வருவதாக பிரித்தானிய உளவுத்துறையின் அறிக்கையொன்றை ஆதாரம் காட்டி, “Reuters” செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. உக்ரைனின் “Bakhmut” பகுதியை காப்பாற்றுவதற்கான முயற்சியில் ரஷ்யா மிகுந்த எதிர்ப்புக்களை சந்தித்து வந்திருந்தாலும் பல மாதங்கள் நடைபெற்ற தாக்குதல்களின் பின்னதாக இப்பகுதியை ரஷ்ய தனது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருப்பதாக பிரித்தானிய உளவுத்துறை தெரிவிப்பதாக “Reuters” தெரிவிக்கிறது.

தற்போதைய நடவடிக்கைகளில் அதிகளவில் ஆட்லறிகளை ரஷ்யா பாவித்து வருவதோடு, தனியார் ரஷ்ய இராணுவக்குழுவான “Wagner” குழுவுக்கும், ரஷ்யப்படைகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்கள் மேலும் இறுக்கமடைந்துள்ளன என தெரிவிக்கப்படும் அதேவேளை, ரஷ்யாவுக்கும், மேற்படி “Wagner” குழுவுக்கும் இடையில் முறுகல் தோன்றியிருப்பதாகவும், “Wagner” குழுவின் தலைவர் ரஷ்ய அதிபராவதற்கு ஆசைப்படுவதால், அவருக்கும் ரஷ்ய அதிபருக்கும் இடையில் முறுகல்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அதனால், இக்குழுவுக்கும், ரஷ்யத்தலைமைக்கும் இடையில் தொடர்புகள் இறுக்கமாக இருக்கவில்லையென்றும் மேற்குலக ஊடகங்கள் அடுக்கடுக்காக செய்திகள் வெளியிட்டிருத்தமையும் குறிப்பிடத்தக்கது.

உக்ரைன் மீதான ரஷ்ய இராணுவ நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து”Bakhmut” பகுதியை கைப்பற்றும் மோதல்கள் தீவிரமானதாக இருந்ததாகவும் குறிப்பிடும் பிரித்தானிய உளவுத்துறை,”Bakhmut” பகுதி முழுமையாக ரஷ்யாவிடம் வீழ்ந்துள்ளதால், உக்ரைனுக்கான வழங்கல் பாதைகள் ரஷ்யாவால் முடக்கப்படும் பேராபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கிறது என “Reuters” மேலும் குறிப்பிடுகிறது.

எனினும், உக்ரைனிய இராணுவத்தின் பேச்சாளரான “Serhiy Cherevatyi”, தெரிவிக்கையில், “Bakhmut” பகுதி மிகவும் கடினமான நிலையில் உள்ளமையை தான் ஒப்புக்கொள்வதாகவும், எனினும் ரஷ்யப்படைகள் புத்தி சாதுரியமாக செயற்பட்டாலும், “Bakhmut” பகுதியின் கட்டுப்பாட்டை இன்னமும் உக்ரைன் படைகளே வைத்திருப்பதாகவும் தன்னிடம் தெரிவித்துள்ளதாக “Reuters” மேலும் தெரிவிக்கிறது.

 

பகிர்ந்துகொள்ள

Leave a Reply