கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது ட்விட்டர் பக்கத்தில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியுடன் இருக்கும் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் உக்ரைனின் நகரங்கள் பாதிக்கப்பட்டன. 2 பேர் பலியானதுடன் 18 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த நிலையில் கனடாவுக்கு பயணம் மேற்கொண்ட உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் ரஷ்ய படையெடுப்பிற்கு பின் முதல் முறையாக கனடாவுக்கு சென்றுள்ளார். அங்கு நாடாளுமன்றத்தில் பிரதமர் ட்ரூடோவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார் ஜெலென்ஸ்கி.
ஜெலென்ஸ்கியுடன் பேசியது தொடர்பான வீடியோ ஒன்றை ட்ரூடோ பகிர்ந்துள்ளார். அதில், ‘ஜெலென்ஸ்கியுடன் Parliament Hill-க்கு வந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். 18 மாதங்களுக்கு முன்பு, உக்ரைனில் ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பு தொடங்கியது.
மேலும் கனடா ஆரம்பத்தில் இருந்தே இராணுவ, மனிதாபிமான மற்றும் நிதி உதவி மற்றும் இந்த கொடூரமாக போருக்கு காரணமானவர்களுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளுடன் இருந்தது. எங்கள் ஆதரவு அசைக்க முடியாதது. வோலோடிமிர், நான் இப்போதே உங்களுக்கு கூற முடியும். எங்கள் ஆதரவு ஒருபோதும் அசையப் போவதில்லை’ என தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் கேள்விக்கு கனடா பிரதமர் கொடுத்த பதில் இந்தியாவுக்கு எதிரான ஆதாரம் எவ்வளவு வலுவானது? ஊடகவியலாளர் கேள்விக்கு கனடா பிரதமர் கொடுத்த பதில் அதே வீடியோவில் பேசிய ஜெலென்ஸ்கி, ‘மிக்க நன்றி ஜஸ்டின். மேலும் அனைத்து ஆதரவிற்கும் அனைத்து கனேடியர்களுக்கும் நன்றி. எங்களுடன் நிற்பவர்களில் கனடா எப்போதும் உள்ளது.
உங்கள் இதயத்திலிருந்து வரும் ஆதரவை நாங்கள் உணர்கிறோம். அதற்காக நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். கனடாவின் உக்ரேனிய சமூகம் கனேடிய சமூகத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும்.
கனேடிய உக்ரைனியர்களைப் பற்றி நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். அவை நமது சிறப்பு உறவுகளுக்கு – நமது சிறப்புப் பிணைப்புக்கு உறுதியான அடித்தளத்தை உருவாக்குகின்றன. ஒரு கடல் நம் நாடுகளைப் பிரிக்கலாம், ஆனால் நமக்கு இடையே சுவர்கள் இல்லை என்பதே முக்கியமான விடயம்’ என கூறினார்.