உக்ரைனுக்கு உதவ பெரும் தொகையை ஒதுக்கிய சுவிஸ்!

You are currently viewing உக்ரைனுக்கு உதவ பெரும் தொகையை ஒதுக்கிய சுவிஸ்!

உக்ரைனில் புதைக்கப்பட்ட கண்ணி வெடிகளை அகற்ற சுவிட்சர்லாந்து அரசாங்கம் பெரும் தொகையை ஒதுக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் ரஷ்யா போர் கிட்டத்தட்ட 600 நாட்களை தொடவுள்ள நிலையில், சமீபத்தில் உக்ரைனிய துணை ராணுவ படை ரஷ்ய எல்லையை கடந்து பெல்கோரோட் பகுதியில் தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளனர்.

இருப்பினும் போரின் ஆரம்ப கட்டங்களில் ரஷ்ய படைகளின் கை ஓங்கி இருந்த நிலையில், உக்ரைனின் பெரும்பாலான பகுதிகளில் ரஷ்ய படைகள் ஏராளமான கண்ணி வெடிகளை புதைத்து வைத்துள்ளனர்.

உக்ரைனிய படைகளின் எதிர்ப்பு தாக்குதலால் ரஷ்ய வீரர்கள் பின் வாங்கி இருந்தாலும், புதைக்கப்பட்ட கண்ணி வெடிகளை ரஷ்ய வீரர்கள் அப்படியே விட்டு விட்டு சென்றுள்ளனர். இது உக்ரைனியர்களுக்கு தற்போது பெரும் தலைவலியாக மாறியுள்ளது.

இந்நிலையில் உக்ரைனில் புதைக்கப்பட்ட கண்ணி வெடிகளை அகற்ற சுவிட்சர்லாந்து அரசாங்கம் கிட்டத்தட்ட 110 மில்லியன் டொலர் தொகையை ஒதுக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஒதுக்கப்பட்ட தொகையை கொண்டு 2024ம் ஆண்டு முதல் 2027ம் ஆண்டு வரை உக்ரைனிய பகுதிகளில் கண்ணி வெடிகளை அகற்றும் வேலை நடத்தப்படும் என்று உக்ரைனிய வெளியுறவு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த பணம் கண்ணி வெடிகளை அகற்றவும், அதற்கான சிறப்பான உபகரணங்களை வாங்கவும் பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply