உக்ரைனுக்கு எதிரான தமது போரை எதிர்க்கும் ரஷ்யர்கள் தேச விரோதிகள்!

You are currently viewing உக்ரைனுக்கு எதிரான தமது போரை எதிர்க்கும்  ரஷ்யர்கள் தேச விரோதிகள்!

தமது தனிப்பட்ட ஊழியர்களால் தாம் கொல்லப்பட வாய்ப்பிருப்பதாக கூறி, ஒரே நேரத்தில் 1,000 ஊழியர்களை நீக்கி, பதிலுக்கு புதியவர்களை பணிக்கு அமர்த்தியுள்ளார் ரஷ்ய ஜனாதிபதி புடின். உக்ரைன் போருக்கு எதிராக குரல் கொடுக்கும் அல்லது ஆதரிக்க மறுக்கும் ரஷ்யர்கள் தேச விரோதிகள் என அறிவித்துள்ளார் விளாடிமிர் புடின். அரசு சார்பு ரஷ்ய செய்தி ஊடகம் வாயிலாக பேசிய விளாடிமிர் புடின், உக்ரைனுக்கு எதிரான தமது போரை எதிர்க்கும் எவரும் மோசமானவர்கள் என குறிப்பிட்டு வீராவேசமாக பேசியுள்ளார்.

ஆனால், உண்மையில் தமது தனிப்பட்ட பணியாளர்களால் தாம் கொல்லப்பட வாய்ப்பிருப்பதாக அவர் அஞ்சுவதாக தகவல் கசிந்துள்ளது. இதனாலையே, அவருக்கு பரிமாறப்படும் உணவுகள், அவர் கண் முன்னே ஊழியர்களால் சோதிக்கப்படும் என தெரிய வந்துள்ளது.

தமக்கு விஷமளிக்க வாய்ப்புள்ளதாக கூறி, சமையற்கலைஞர்கள், செயலாளர்கள், சலவைக்காரர்கள் என சுமார் 1,000 பேர்களை கடந்த மாதம் பணி நீக்கம் செய்து, புதிதாக பணிக்கு ஆட்களை அமர்த்தியுள்ளார் புடின்.

பொதுவாக விளாடிமிர் புடினின் ரஷ்ய நிர்வாகம் எதிரிகளை விஷம் வைத்தே கொன்று வருகிறது. ரஷ்ய அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து வந்த Alexander Litvinenko என்பவரை புடினின் உளவுத்துறையே தேநீரில் விஷம் கலந்து 2006ல் கொலை செய்துள்ளது.

முன்னாள் உளவாளியான Sergei Skripal என்பவர் மீது 2018ல் நடந்த இதுபோன்றதொரு தாக்குதலில் இருந்து அவரும் அவரது மகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

மேலும், ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னிக்கு விஷம் கொடுக்க புடின் உத்தரவிட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அந்த தாக்குதலில் இருந்து உயிர் தப்பிய நவல்னி தற்போது சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply